உள்ளூர் செய்திகள்

பாடத்திட்டத்தில் இயற்கை பேரிடர் தடுப்பு மேலாண்மை

அகில உலக பேரிடர் தடுப்பு மேலாண்மை மூன்று நாள் மாநாடு திண்டுக்கல் பி.எஸ். என்.ஏ. பொறியியல் கல்லூரியில் துவங்கியது. கல்லூரி இயக்குனர் ஆர்.எஸ். கே.லட்சுமண பிரபு தலைமை வகித்தார். முதல்வர் எம்.பி.ராகவன் முன்னிலை வகித்தார். டீன் சுப்ரமணியம் வரவேற்றார்.   டில்லி தேசிய பேரிடர் மேலாண்மை மைய இயக்குனர் தர்.சக்கரபர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:   இயற்கை பேரிடர் தாக்குதலுக்கு உள்ளாவதில் உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. உயிர், பொருளிழப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதை எதிர்கொள் வது, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக டில்லியில் தேசிய பேரிடர் மையம் துவக்கப் பட்டுள்ளது.   கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசு பாடத் திட்டத்தை பின்பற்றும் பொறியியல் கல்லூரிகளில் சிவில் பாடத்திலும், பள்ளி பாடங்களிலும் இயற்கை பேரிடர் குறித்து பாடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள நீண்ட கடற்கரை சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. மக்கள் விழிப்புணர்வு அடைய மாநில அரசுகளும் இயற்கை பேரிடரை எதிர்கொள்வது குறித்து பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்