உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதிக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம்

மைசூரில் அவர் அளித்த பேட்டி:கர்நாடக திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் 18 வது பட்டமளிப்பு இன்று நடக்கிறது. இவ்விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் அவரும் பங்கேற்பதாக தெரிவித்து உள்ளார். அவரால் பங்கேற்க முடியவில்லை என்றால், ஜூலை 3ம் தேதி பெங்களூரு வரும் ஜனாதிபதியிடம், பல்கலைக்கழக அதிகாரிகள் நேரில் சந்தித்து வழங்குவர். ஜனாதிபதியுடன், பெங்களூரு மாகடி சாலையில் உள்ள லட்சுமி குரூப் ஆப் இன்ஸ்டிடியூட் நிறுவனர் ராமசந்திரையா, ஆக்ஸ்போர்டு கல்வி நிலைய தலைவர் வெங்கட லட்சுமி நரசிம்மராஜு ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. மேலும் 8,722 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்