உள்ளூர் செய்திகள்

வணிகர் நல வாரியம் உறுப்பினர் அதிகரிப்பு

சென்னை: தமிழக வணிகர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர் எண்ணிக்கையை 30 ஆக அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.வணிகர்களை ஊக்குவிக்கவும் அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கவும் தமிழக வணிகர் நல வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தின் தலைவராக முதல்வர் துணைத் தலைவராக வணிக வரித் துறை அமைச்சர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக வணிக வரித் துறை செயலர் வணிக வரித் ஆணையர் நிதித் துறை சிறப்பு செயலர் தொழிலாளர் நல செயலர் வாரியத்தின் முதன்மை செயலர் ஆகியோர் உள்ளனர்.அலுவல் சாரா உறுப்பினர்களாக 20 பேர் இருந்தனர். இதனை மாற்றி அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை வணிக வரித் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்