ஊரக கண்டுபிடிப்பாளர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: கடந்த நிதியாண்டுக்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆண்டுதோறும், இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்பாளர்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை www.sciencecitychennai.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கலெக்டர் வழியே, அறிவியல் நகரத்துக்கு, ஆக.,30 மாலை 5:30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.அறிவியல் ஆசிரியர் விருதுகணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் புவியியல், கணினி அறிவியல், வேளாண் நடைமுறைகள் துறைகளில், சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டு, அறிவியல் நகர அலுவலகத்திற்கு, செப்.,14 மாலை 5:30 மணிக்குள் வர வேண்டும்.