உள்ளூர் செய்திகள்

வேளாண் வளர்ச்சிக்காக பாலக்காடு ஐ.ஐ.டி., ஒப்பந்தம்

பாலக்காடு: வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஏற்படுத்த, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் பாலக்காடு ஐ.ஐ.டி., ஒப்பந்தம் செய்துள்ளது.கேரள மாநிலம் பாலக்காட்டில் செயல்பட்டு வரும் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐ.ஐ.டி., பாலக்காடு இயக்குனர் சேஷாத்ரி சேகரின் முன்னிலையில், ஆராய்ச்சி டீன் சாந்தகுமார் மோகனும் ஐ.சி.எ.ஆர்.சி.டி.சி.ஆர்.ஐ., இயக்குனர் பைஜூவும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர். பயிர் மாதிரியாக்கம், விளைச்சல் முன்னறிவிப்பு, வானிலை முன்னறிவிப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவை உட்பட பல்வேறு வேளாண் துறைகளில் உள்ள ஆராய்ச்சி வளர்ச்சி திட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. ஆர்வமுள்ள ஆராய்ச்சி பகுதிகளை ஆராய்வதற்கும், விவசாயத்தில் புதுமை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்