உயரிய விருது வென்ற இளம் எழுத்தாளர்
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த கே.அகில் என்ற 28 வயது இளைஞர் வறுமை காரணமாக, அதிகாலை வீடு வீடாக செய்தித்தாள் விநியோகித்தும், இரவில் மண் அள்ளும் பொக்லைன் இயந்திர ஓட்டுநராகப் பணிபுரிந்தும் வருகிறார். இதற்கிடையே, எழுத்தாளராக அவதாரம் எடுத்த அந்த இளைஞர், கேரள சாகித்திய அகாதமி நிறுவிய கீதா ஹிரண்யன் இலக்கிய விருதை பெற்றுள்ளாார். 2020-ஆம் ஆண்டு வெளியான நீலச்சடையன் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.