உள்ளூர் செய்திகள்

ஸ்டெம் கல்வி கற்பிக்க உபகரணங்கள் தயார்

கோவை: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஸ்டெம் கல்வி பயிற்றுவிப்பதற்கான அறிவியல் சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.தமிழக அரசின் வானவில் மன்ற திட்டத்தின்கீழ் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த ஸ்டெம் கல்வி, பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. அதன்படி, மூன்று மாவட்டங்களில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவை மாநகராட்சியில், 12 மேல்நிலை, எட்டு உயர்நிலை என 20 மாநகராட்சி பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும், 5,000 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். இதற்கென, சென்சார் தொழில்நுட்பம் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த உபகரணங்களை, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.மாநகராட்சி கல்வி அலுவலர் மரியசெல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்