தேனி மருத்துவக்கல்லுாரிக்கு பொறுப்பு முதல்வர் நியமனம்
தேனி:தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பொது மருத்துவத்துறை பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் எஸ்.எம்.திருநாவுக்கரசு என்பவரை கல்லுாரி பொறுப்பு முதல்வராக நியமித்து மருத்துவக்கல்வித்துறை இயக்குனர் டாக்டர் சாந்திமலர் உத்தரவிட்டுள்ளார். திருநாவுக்கரசு விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இங்கு இருந்த முதல்வர் மீனாட்சிசுந்ரதம் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக வெளியான வீடியோவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.