உள்ளூர் செய்திகள்

யானை பராமரிப்பாளர் பெள்ளிக்கு அரசு வேலை

சென்னை: யானைகள் முகாமில் தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் பெள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் அரசு வேலை வழங்கினார்.நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு; பொம்மியை பராமரித்து வந்த பழங்குடி தம்பதியினர் பொம்மன் - பெள்ளி இடையேயான பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்துக்கு, ஆஸ்கார் விருது கிடைத்தது. இதன் மூலம் யானை குட்டிகள், பாகன் தம்பதி உலக புகழ் பெற்றுள்ளனர்.இந்த யானைகள் முகாமில் தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் பெள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் அரசு வேலை வழங்கினார். தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு பணிநியமன ஆணையினை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்