உள்ளூர் செய்திகள்

பொது பாடத்திட்டத்தால் பிரச்னை இல்லை: அமைச்சர்

சென்னை: பொதுப் பாடத்திட்டத்தால் எந்த பிரச்னையும் இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.மேலும் அவர் கூறுகையில், அனைவரையும் ஆலோசித்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களது நோக்கம். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு விளக்கம் அளிக்க தயார் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்