உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவனம் மோசடி: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

சென்னை: சி.பி.எஸ்.இ., பெயரை பயன்படுத்தி, தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளதால், உஷாராக இருக்கும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை விடுத்துள்ளது.சி.பி.எஸ்.இ., டில்லி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:விஸ்கார்ப் எடுடெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், சி.பி.எஸ்.இ., பெயரை தவறாக பயன்படுத்தி, கடிதம் தயாரித்து, பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது. அதில், சி.பி.எஸ்.இ., பரிந்துரைத்தாக குறிப்பிட்டு, பல்வேறு பொருட்களின் கொள்முதலுக்கான டெண்டர் மற்றும் ஒப்பந்த பணிகளை பெறுவதாக புகார் எழுந்துள்ளது. எந்த நிறுவனத்துக்கும், இதுபோன்ற பரிந்துரை கடிதத்தை, சி.பி.எஸ்.இ., அளிக்கவில்லை. எனவே, மோசடியாக செயல்படும் விஸ்கார்ப் நிறுவனத்தின் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதேநேரம், பள்ளிகள் எச்சரிக்கையுடன் இருந்து, இதுபோன்ற மோசடி நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைத்து, ஏமாறாமல் இருக்க வேண்டும். அவ்வாறு பணிகளை வழங்கி பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு சி.பி.எஸ்.இ., நிர்வாகம் பொறுப்பாகாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்