கல்லுாரி மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி
கோவை: கல்லுாரி மாணவர்களுக்கிடையே, மாதிரி நீதிமன்றம் போட்டிகள் நடத்தப்படவுள்ளன; இவற்றில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவையில் இயங்கி வரும் சிட்டிசன் வாய்ஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கை:மூன்று விதமான தலைப்புகளில் இளங்கலை, முதுகலை மாணவர்கள் பங்கேற்கலாம். டிஜிட்டல் சகாப்தம் என்ற தலைப்பில், ஆன்லைன் வணிக அபாயங்கள், இணையதள ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறு நாடகம், திடக்கழிவு மேலாண்மை என்ற தலைப்பில், வீட்டுக் கழிவுகளைக் கையாள்வது குறித்த ஒரு வீதி நாடகம் உருவாக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற தலைப்பிலும், எதிர்காலத் திட்டங்களை விளக்கும் கருத்து வடிவமைப்பைத் தயாரிக்கலாம்.கோவை குமரகுரு கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 19, 20ல் போட்டிகள், காலை 10:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை நடக்கும். ஒரு கல்லுாரியிலிருந்து அதிகபட்சமாக ஐந்து அணிகள் இடம் பெறலாம். ஒவ்வொரு அணியிலும் 10 மாணவர்கள் பங்கேற்கலாம். தெரு நாடகங்களில் ஒரு அணியில் ஏழு பேர் வரை அனுமதிக்கப்படுவர். வரும் 8ம் தேதிக்குள், citizensvoiceclub@gmail.com, info@citizensvoicecoimbatore.orgஆகிய மெயில்களில் விண்ணப்பிக்கலாம். முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம், சிறந்த கல்லுாரிக்கு கேடயம் மற்றும் பரிசு, சிறந்த நுகர்வோர் கழக ஒருங்கிணைப்பாளருக்கு கோப்பை, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு, 78670 02534, 96009 04478.