உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ஏற்றுமதி மேம்பட புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச பின்னலாடை பொன் விழா கண்காட்சி, அக்., 12ல் துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.திருப்பூரில் இந்தியா நிட்பேர் அசோசியேஷன் (ஐ.கே.எப்.ஏ.,), ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில், ஆண்டுக்கு இருமுறை, சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடத்தப்படுகிறது. சர்வதேச பின்னலாடை பொன் விழா கண்காட்சி, அக்., 12ல் துவங்கி மூன்று நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதைப் பார்வையிட ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேஷன்ஷோ நடைபெற உள்ளது.பின்னலாடைக் கண்காட்சி குறித்த அறிமுகக்கூட்டம் டில்லியில் நடந்தது. அப்போது, ஐ.கே.எப்.ஏ., பிராண்ட் அண்ட் சோர்சிங் லீடர்ஸ் அசோசியேஷன்(பி.எஸ்.எல்.,) தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்லுாரி(நிப்ட்) முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில் பின்னலாடைக் கண்காட்சி திருப்பூருக்கு திருப்புமுனை ஏற்படுத்துவதாக அமையும். ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்பு ஆடைகளைக் காட்சிப்படுத்துவர். புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், புதிய வர்த்தக வாய்ப்புகள் திருப்பூருக்கு கிடைக்கும். பின்னலாடை ஏற்றுமதிக்கான புதிய கண்டுபிடிப்புகள், செயற்கை நுாலிழை துணி வகைகள் என, எண்ணற்ற தொழில் வளர்ச்சிக்கான அம்சங்கள் கிடைக்கும். தேசிய அளவிலான தொழில்நுட்ப பகிர்வு, திருப்பூருக்கு சாத்தியமாகியுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்