உள்ளூர் செய்திகள்

‘நிகர்நிலைப் பல்கலை முறை ரத்து செய்யப்படும்’

புதுடில்லி: நிகர்நிலைப் பல்கலைக்கழக முறை ரத்து செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். “இது கொள்கை ரீதியான முடிவு. எதிர்காலத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழக முறையே இல்லாமல் போகலாம். இதற்கு தேவையான சட்டங்களை முன்வைத்துள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளார். 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், கபில் சிபல் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து குறித்து கூறுகையில், இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்