உள்ளூர் செய்திகள்

‘இந்திய பயோடெக்னாலஜி துறைக்கு சிறந்த எதிர்காலம்’

பெங்களூரு: இந்திய பயோடெக்னாலஜி (உயிரி தொழில்நுட்பம்) துறை வரும் 2015ம் ஆண்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் (10 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, பயோகான் நிறுவன தலைவர் கிரான் மசும்தார்-சா கூறுகையில், “இந்திய பயோடெக்னாலஜி துறையில் சாதகமான நிலை நிலவுவதால், அடுத்த ஆண்டில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பை எட்டும். இத்துறை சார்ந்த உற்பத்திக்கு அதிக தேவை நிலவுகிறது. சர்வதேச நிறுவனங்களும் தங்களது இடத்தை ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு மாற்ற உள்ளனர்” என்றார். வேளாண் உயிரிதொழில்நுட்பம் மற்றும் உயிரி எரிபொருள் ஆகியவற்றிற்கு இந்தியாவில் மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 5 ஆண்டில் இத்துறையில் இந்தியா சிறப்பான இடத்தை பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்