உள்ளூர் செய்திகள்

தொழில்நுட்ப திறனோடு இருந்தால்தான் வேலை: தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில், உயர்கல்வித்துறை சார்பில், ஸ்கில் டா எனும் பெயரில், திறன் மேம்பாட்டு பயிலரங்க துவக்க விழா, நேற்று நடந்தது.இதில் துறை இயக்குநர் அமன் ஷர்மா வரவேற்றார். ஸ்கில் டா தலைமை திட்ட அதிகாரி, கோட்டாராம் ரமேஷ் துவக்க உரையாற்றினார். கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். முகாமை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது:இந்தியாவில் 60 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். திறமைகளை தொழில்நுட்ப ரீதியாகவும், மேம்படுத்திக் கொண்டால் தான், வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உங்களுக்கு கல்வியையும் இது போன்ற அமைப்புகள் மூலம் தேவையான திறன்களையும் வழங்கி வருகிறது.அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திறன்களை வளர்க்கும்போது தான், வாய்ப்புகள் பெருகும். எனவே நீங்கள் தினம் தினம் உங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்