பள்ளிகளில் காலை உணவு: கலெக்டர் ஆய்வு
கரூர்: கரூர் மாநகராட்சி காளியப்பானுார் அரசு ஆரம்ப பள்ளியில், காலை உணவு திட்டத்தை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், 705 மையங்களில் 29,449 தொடக்க பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சுவையாக, சத்தான உணவாக வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார்.முன்னதாக, தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள காலை உணவு திட்டத்திற்கான மைய சமையல் கூடத்தை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு, சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி, மாநகராடசி நகர் நல அலுவலர் லட்சியவர்மன், மாநகராட்சி மண்டல தலைவர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.