உள்ளூர் செய்திகள்

ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு பொறியியல் மாணவர்கள் சபாஷ்

திருப்பூர்: ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில், மத்திய அரசின் தொழில்நுட்ப துறை மற்றும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் இணைந்து, 31வது ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தின.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 70 பள்ளிகளில் இருந்து, 205 ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன. இதில், சென்சுரி பவுண்டேஷன் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, 2 ஆய்வறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டன.ஆசிரியர் ஜீவா வழிகாட்டுதலில் மாணவர்கள் விஷால், முகேஷ் ஆகியோர், சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் மாசடைந்த விஜயாபுரம் குளம்- மீட்டெடுத்தல் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பிலான கட்டுரையும், ஆசிரியர் கவிதா வழிகாட்டுதலில், மாணவிகள் தரணிகா, ரிதேஷ்னி ஆகியோர், வீட்டுக்கழிவுகளை முறையாக அகற்றுவதில் க்யூ ஆர் குறியீட்டின் பயன்பாடு என்ற தலைப்பிலான ஆய்வு கட்டுரையும், மண்டல அளவிற்கு தேர்வாகின. கட்டுரை சமர்ப்பித்த மாணவ, மாணவியரை சென்சுரி பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர்ஹெப்சிபா பால், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்