சிவகங்கை மாணவிக்கு பிரதமர் மோடி கடிதம்
சிவகங்கை: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி சன்மதிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில் பஞ்சபிரான் எனும் ஐந்து உயிர் மூச்சான கொள்கைகள் உன்னதமான இந்தியாவிற்காக எனும் முக தலைப்பிட்டு, வளர்ச்சி அடைந்த பாரதத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல் கடமைகளில் கவனம் செலுத்துதல் தலைப்புகளை குறிப்பிட்டுள்ளார். மாணவியை பள்ளி நிர்வாகம், சக மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.