புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் மற்றும் கல்லறை திருவிழாவையொட்டி, பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி மாநிலம், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி விடுதலை பெற்றது. அதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி மாநிலத்தின் விடுதலை நாளாக கொண்டாடபட்டு வருகிறது.இன்று (நவ.1) புதுச்சேரி விடுதலை நாள், நாளை (2ம் தேதி) கல்லறை திருவிழா முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ளார்.