டி.என்.பி.எஸ்.சி., முடிவுகள் தாமதம்: பன்னீர்செல்வம் கண்டனம்
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., வழியே நடத்தப்படும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதை, அரசு தாமதப்படுத்தி வருவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: அரசுப் பணிகள் தொய்வின்றி நடக்க, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அவை ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எஸ்.சி., வழியே நிரப்பப்பட வேண்டும்.கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும், மிகப் பெரிய அளவில் தாமதம் ஏற்படுகிறது. இது தி.மு.க., அரசின் திறமையின்மைக்கு ஒரு எடுத்துக் காட்டு. அரசு துறைகளில், லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, டி.என்.பி.எஸ்.சி., வழியே 15 ஆயிரம் பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை.டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. மேலும், 5,000 பணியிடங்களுக்கான குரூப் - 2 முதன்மைத் தேர்வு முடிந்து, முடிவுகள் வெளியிடப்படவில்லை.இந்த ஆண்டு குரூப் - தேர்வுக்கான அறிவிப்பு, அக்டோபரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை அறிவிக்கப்படவில்லை. குரூப் - 1 தேர்வுக்கான அறிவிப்பு, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுநாள் வரை வெளியிடப்படவில்லை. இளைஞர்கள் நலன் கருதி, உடனடியாக டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு, ஆட்களை தேர்வு செய்து, வேலை இல்லா திண்டாட்டத்தை, அரசு போக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.