உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு பட்டய பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

கடலுார்: கடலுார் எம்.ஜி.ஆர்.,கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2023-24ம் ஆண்டிற்கான அஞ்சல் வழி, பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர மேல்நிலைப் பள்ளி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் எம்.ஜி.ஆர்.,கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அஞ்சல் வழி, பகுதி நேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பம் இணையவழி மூலமாக பெறப்பட்டு மாணவர் சேர்க்கை கடந்த 10ம் தேதி முதல் துவங்கி, வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. மேல்நிலை பள்ளி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் (10+2+3) முறையில் பயின்றவர்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்