பள்ளிகள் இன்று இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.கல்வித்துறை அலுவலக செய்திகுறிப்பு:வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால், இன்று புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.