அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட்
தொண்டாமுத்தூர்: ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியரும், தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க தலைவருமான ராஜ்குமாரை, சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.அந்த உத்தரவில், ஓவிய ஆசிரியர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக, சக ஆசிரியர்கள் மீது ஊடகங்களுக்கு தவறான தகவல் பரப்புவதாலும், போலி ஆசிரியர் சங்கம் நடத்தி, அதன் லெட்டர் பேடு மூலம் கல்வித்துறைக்கு எதிரான கருத்துக்கள் பரப்பி வருவதாலும், சஸ்பெண்ட் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.