அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கற்களை கரைக்கலாம்!
தேனி: அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கற்களை கரைக்கலாம் என ஹோமியோபதி மருத்துவர் சரவணன் கூறுகிறார்.டாக்டர் சரவணன் கூறியதாவது: சிறுநீரில் அதிக அளவில் உப்புக்கள், தாதுக்கள் இருந்தால் சிறுநீரக கல் உற்பத்தியாகும். நமது சிறுநீரின் அளவு மிக குறைவாக இருந்தால் அதில் உள்ள கிருமிகள் அதிகமாக இருந்தால் படிகம் கல் உருவாகும்.படிகமானது நமது உடம்பில் உள்ள ரசாயனங்களுடன் சேர்ந்து கற்களை உருவாக்கும். பொதுவாக கற்களை உருவாக்கும் ரசாயனங்கள் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸ்லேட், யுரேட், சிஸ்டின் ஆகியவை அடங்கும். சிறுநீரக கற்கள் முதலில் சிறிய அளவில் இருந்து பெரிய அளவிற்கு மாறும். சீறுநீரகத்தில் உள்ள காலியிடத்தை ஆக்கிரமிக்கும், சிறுநீரக குழாய் மூலம் சிறுநீர் பைக்கு சென்றடையும். அங்கு சென்ற கற்கள் சிறுநீர் மூலம் வெளியேறிவிடும். ஆனால் சிறுநீரக கற்கள் சிறுநீரக குழாய்களில் தங்கி விட்டால் நமக்கு வலி ஏற்படும். சிறுநீர் செல்லும் பாதையை அடைக்கும்.அறிகுறிகள்முதுகு பக்கவாட்டில் வலி ஏற்படும். வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படும். சிறுநீரின் நிறம் வித்தியாசமாக இருக்கும். சிறுநீரில் ரத்தம் கலந்து வரும். காய்ச்சல், வாந்தி, குமட்டல் இருக்கும். காரணங்கள்: நீர் குறைவாக குடித்தல், அதிக உப்பு , இனிப்பு உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல், பிரக்டோஸ் என்ற பொருள் உள்ள உணவுப் பொருட்களை அதிகளவில் சேர்த்துக் கொள்வதால் பெண்கள், குழந்தைகளுக்கு சிறுநீரக கற்கள் உண்டாகும்.தடுக்கும் முறைகள்தினமும் அதிகமாக குடிநீர் பருக வேண்டும். குளிர்பானங்கள், அதிக உப்பு, இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக அளவு இறைச்சி எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். காலி பிளவர், முட்டைக்கோஸ், திராட்சை ஆகிய காய்கறி, பழங்களை சாப்பிட கூடாது.பாதிப்பிற்கு பின் என்ன செய்ய வேண்டும்பால் பொருட்களை குறைவாக சேர்த்தக் கொள்ளலாம். ஆக்சிலேட் குறைவான உணவுப் பொருட்கள், நீர் சத்து அதிகம் உள்ள காய்கறி பழங்களை சாப்பிடலாம்.ஹோமியோபதி சிகிச்சைஇம்மருத்துவ முறையில் எளிய முறையில் மருத்துகளை உட்கொள்வதன் மூலம் அறுவை சிகிச்சை இன்றி கற்களை கரைத்து மீண்டும் உருவாகாமல் தடுக்கலாம். இச்சிகிச்சை முறையில் பத்தியமோ, பக்க விளைவுகள் இல்லை என்றார்.தொடர்புக்கு: டாக்டர் எம்.சரவணன் தேனி, 89739 14438