உள்ளூர் செய்திகள்

கண்டிகை அரசு பள்ளி தரம் உயர்வு

செங்கல்பட்டு: தமிழகத்தில், 2023- 24ம் கல்வியாண்டில், தமிழகம் முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த, கடந்த டிச., 26ம் தேதி அரசு உத்தரவிட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், காயரம்பேடு, புக்கத்துறை, ஜமீன் எண்டத்துார், கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த, பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், தலா 2 லட்சம் ரூபாய் அரசுக்கு செலுத்தப்பட்டது.இப்பள்ளிகளை தரம் உயர்த்த, கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு, முதன்மை கல்வி அலுவலர், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் கருத்துரு அனுப்பி வைத்தார். இதில், வண்டலுார் அடுத்த கண்டிகை உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்