உள்ளூர் செய்திகள்

டிட்டோ ஜாக் குழுவினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பல்லடம்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், பல்லடம் தாலுகா அலுவலக முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக ஆசிரியர் கூட்டணியின் பல்லடம் வட்டார தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், வட்டார செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் காஞ்சனா தேவி, டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் துணைச் செயலாளர் தயாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டார ஒருங்கிணைப்பாளர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி ராமகிருஷ்ணன், சுசீலா, ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்