உள்ளூர் செய்திகள்

அமைச்சர்களின் டிரைவர்களுக்கு தெலுங்கானாவில் திடீர் தேர்வு

ஹைதராபாத்: தெலுங்கானா எம்.எல்.ஏ., லாசியா நந்திதா சமீபத்தில் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அம்மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகளின் கார் டிரைவர்களின் திறனை உறுதி செய்ய மீண்டும் ஓட்டுனர் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த லாசியா நந்திதா எம்.எல்.ஏ.,வாக இருந்தார். சமீபத்தில் உதவியாளருடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அனுபவம் இல்லாத டிரைவரால் தான் விபத்து நிகழ்ந்ததாக புகார் எழுந்தது.இது குறித்து தெலுங்கானா போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:முக்கிய பிரமுகர்கள் சாலை விபத்துகளில் உயிரிழப்பதற்கு, போதிய அனுபவம் இல்லாத டிரைவர்களே காரணம். தொலைதுார பயணங்களுக்கு திறமையான, அனுபவம் வாய்ந்த டிரைவர்களை அமர்த்த வேண்டும்.எம்.எல்.ஏ., லாசியாவின் மரணத்தை தொடர்ந்து அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் டிரைவர்களுக்கு மீண்டும் ஓட்டுனர் தேர்வு வைத்து திறனை உறுதி செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்