உள்ளூர் செய்திகள்

தேனி புத்தகத்திருவிழா பணி கலெக்டர் ஆய்வு

தேனி: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மார்ச் 3 முதல் மார்ச் 10 வரை புத்தகத்திருவிழா பழனிசெட்டிபட்டியில் நடக்கிறது.அங்கு அரங்குகள் அமைத்தல், நுழைவு வாயில், மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்வதற்கான வழி, சிறுவர்களுக்கான பொழுது போக்கு இடங்கள், உணவுப்பொருட்கள் விற்பனை கூடங்கள், பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடம், மற்றும் பணிகள் பற்றியும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் பற்றியும் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார். மேலும் குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து வசதி போதிய அளவில் ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலி ஜின்னா, பி.ஆர்.ஓ.,நல்லதம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்