தென்னையில் வெள்ளை ஈ மாணவர்கள் கணக்கெடுப்பு
பொள்ளாச்சி: ஆனைமலை வட்டாரத்தில், கேரள வேர் வாடல் நோய் மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது.ஆனைமலை வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை:ஆனைமலை வட்டார அனைத்து கிராமங்களிலும், கோவை வேளாண் பல்கலை மாணவர்கள் அடங்கிய குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, இன்றும், நாளையும் ஒரு கிராமத்திற்கு, 5 மாணவர்களை அடங்கிய குழுவினர், கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.அவர்களுக்கு, வேளாண், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். எனவே, தென்னை விவசாயிகள், தங்களது பெயர், தந்தை பெயர், தென்னை ரகம் வாரியாக சாகுபடி பரப்பு, பூச்சி நோய் தாக்கிய விபரம், வெட்டி அகற்றப்பட்ட மரங்கள் விபரம், ஆதார் எண், மொபைல்போன் எண் விபரங்களை சம்பந்தப்பட்ட குழுவினரிடம் வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.