உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டில் நர்ஸ் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் பணிபுரிய விருப்பம் உள்ள, செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் இருந்து செவிலியர் பணியிடங்களுக்கு தேவைப்பட்டியல் வந்துள்ளது. அங்கு பணிக்கு செல்வதற்கு, அந்தந்த நாட்டுக்குரிய சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எனவே, இந்நாடுகளில் செவிலியர் பணிக்கு செல்ல விருப்பம் உள்ள செவிலியர்களுக்கும், செவிலியர் படிப்பு படிப்போருக்கும், அந்த சிறப்பு தேர்வுக்கான பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களின் சுய விபர விண்ணப்பத்தை, omcflt.24@gmail.com என்ற இ - மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். மேலும் தகவல்களை, www.omcmanpower.tn.gov.in இணையதளம் வழியாகவும், OMCL என்ற மொபைல் ஆப்ஸ் வழியாகவும் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்