உள்ளூர் செய்திகள்

திருப்பூர் குமரன் வரலாறு தமிழாசிரியருக்கு பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலை கல்லுாரியில், நுாலகம் மற்றும் வரலாற்றுத் துறை இணைந்து, கடந்த, அக்., மாதம் சுதந்திர போரட்ட தியாகி பிறந்த தின நிகழ்ச்சி நடத்தின.இதில், பெருமாநல்லுார் ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஆழ்வை கண்ணன், குமரன் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ், இலக்கியம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் ஆழ்வை கண்ணனுக்கு, கல்லுாரி முதல்வர் எழிலி, நினைவு பரிசு வழங்கினார். வரலாற்று துறை தலைவர் கிரிஜா ஆரோக்கியமேரி, கல்லுாரி நுாலகர் அனுராதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்