உள்ளூர் செய்திகள்

வேளாண் மாணவர்கள் காளான் வளர்ப்பு பயிற்சி

கடலுார்: ஈச்சங்கோடு எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லுாரி மாணவர்கள் கல்குணம் கிராமத்தில் காளான் வளர்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.தஞ்சாவூர், ஈச்சங்கோடு எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் 10 பேர் கிராமப்புற ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த பயிற்சி பெற்று வருகின்றனர்.பேராசிரியர்கள் ஜவகர், பாரதி ஆகியோர் தலைமையில், பேராசிரியை அனிதா வழிகாட்டுதல்படி குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் கிராமத்திற்கு சென்றனர்.அங்கு சிப்பி காளான் மற்றும் பால் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர் கவுரியின் காளான் பண்ணையை பார்வையிட்டனர். இவரிடம் காளான் வளர்ப்பு, அறுவடை செயல்பாடு, அதன் மதிப்பு கூட்டுதல் விவரங்கள் பற்றி மாணவர்கள் கேட்டறிந்தனர். மேலும், காளான் வளர்ப்பில் உள்ள சிக்கல், அதற்கான தீர்வு குறித்தும் கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்