உள்ளூர் செய்திகள்

சேலம் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் 2025 மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இவரது பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், அவருக்கு நீட்டிப்பு வழங்க பல்கலை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பதவி நீட்டிப்பு கிடைக்க விடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டித்து கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். பதவி நீட்டிப்புக்கான உத்தரவை கவர்னரிடம் இருந்து துணைவேந்தர் பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்