உள்ளூர் செய்திகள்

உலக சகோதரத்துவ தின சொற்பொழிவு போட்டிகள்

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் உலக சகோதரத்துவ தினத்தையொட்டி சொற்பொழிவு போட்டிகள் நடந்தன.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம், சுவாமி விவேகானந்தர், 1893, செப்., 11ம் தேதி சிகாகோவில் நடந்த உலக சர்வ சமய மாநாட்டில் உரையாற்றிய நிகழ்வினை உலக சகோதரத்துவ தினமாக கொண்டாடியது.இந்நிகழ்ச்சியையொட்டி, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையேயான சொற்பொழிவு போட்டிகள் நடந்தன. விழாவில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். வித்யாலயா பள்ளி, கல்லூரி அளவில் முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு இறுதி சுற்று போட்டிகள் நடந்தன.உலக சகோதரத்துவம் குறித்து வித்யாலயா கல்வி நிறுவனங்களின் உதவிச் செயலாளர் தத்பாஸானந்தர் பேசினார். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவில் சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி தேவிகா முதலிடத்தையும், நந்தனா இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்