உள்ளூர் செய்திகள்

விமானப்படை கல்லுாரிக்கு ஏர்மார்ஷல் வருகை

கோவை : கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள, விமானப்படை நிர்வாக கல்லுாரிக்கு இந்திய விமானப்படை பெங்களூரு முதன்மை கமாண்டிங் அதிகாரி நாகேஷ் கபூர்நேற்று வருகை தந்தார்.அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர், கல்லுாரியில் உள்ள வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.அவர் பேசுகையில், விமானப்படை நிர்வாக கல்லுாரியில் பயிற்சி பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும், இந்திய விமானப்படையின் ஆற்றல் குறித்தும் விளக்கினார். எதிர்கால சவால்களை சந்திக்க, கடுமையாக பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்