சி.ஏ., தேர்வு தேதி; கனிமொழி நிம்மதி
சென்னை: பொங்கல் தினத்தன்று நடக்க இருந்த சி.ஏ., தேர்வு, 16ம் தேதிக்கு மாற்றப்பட்டது நிம்மதி தருவதாக, தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகமும், தி.மு.க.,வும் எப்போதும் நம் மக்களின் பிரச்னைகளுக்காகவே நிற்கின்றன. நம் இதயங்களுக்கு நெருக்கமான பண்டிகையான பொங்கல் தினத்தன்று, சி.ஏ., தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தி.மு.க., சார்பில், நேற்று பார்லிமென்டில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்தேன்.தற்போது, 14ம் தேதியிலிருந்து, சி.ஏ., தேர்வு 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது எனக்கு நிம்மதியாக இருந்தாலும், நம் கலாசார விழுமியங்களை, மத்திய அரசு திரும்ப திரும்ப கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. உண்மையான ஒத்துழைப்பு அவர்களிடமிருந்து வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.