உள்ளூர் செய்திகள்

வேளாண் மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி

பாகூர் : பாகூரில் வேளாண் பயிற்சி பெற்று வரும் மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், நிலக்கடலை ரிச் பயன்படும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.புதுச்சேரி மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரியில் பயிலும் இளநிலை இறுதியாண்டு மாணவர்கள், ஊரக வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாகூரில் வேளாண் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் முஹம்மத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர் மற்றும் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடந்த நிகழ்ச்சியில், அப்பகுதி விவசாயிகளுக்கு நிலக்கடலை ரிச் முறை குறித்தும் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாணவர்கள் விளக்கினர்.அதன் முலம் நிலக்கடலையில் அதிக பூ பிடிக்கும் திறன், வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் 15 சதவீதம் விளைச்சலை அதிகரிக்க உதவும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்