உள்ளூர் செய்திகள்

மாணவர்களிடம் பகுத்தறிவு பிரசாரம்: தி.மு.க., முடிவு

சென்னை: மாணவர்களிடையே பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என திமுக மாணவர் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது.தி.மு.க., மாணவர் அணி செயலர் எழிலரசன் வெளியிட்ட அறிக்கை:காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில், காசியுடன் தமிழகத்திற்கு இருக்கும் கலாசார தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம் என்ற முழக்கத்துடன், 2022 முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை, பா.ஜ., அரசு நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் கருப் பொருளாக, அகத்திய எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.அதன் தொடர்ச்சியாக, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு, நடைபயணம் நடத்தப்பட்டு உள்ளது.ஹிந்துத்துவ அரசியல் செயல் திட்டத்தை மாணவர்களிடம் பரப்பி, அவர்களின் அறிவியல் பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை, மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கு எதிராக, மாணவர்கள் இடையே பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்