டிப்ளமா படித்தவர்களுக்கு ஷார்ஜாவில் வேலைவாய்ப்பு
சென்னை: டிப்ளமோ படித்தவர்களுக்கு ஷார்ஜாவில் வேலைவாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அறிக்கை:ஸ்டீல் ஸ்ட்ரக்சுரல் பேப்ரிகேட்டர்ஸ், சி.என்.சி., லேசர் கட்டிங் மெஷின் புரோகிராமர் கம் ஆப்பரேட்டர், போர்க் லிப்ட் கம் ஜே.வி.சி., ஆப்பரேட்டர், ஹெவி பஸ் டிரைவர், மார்க்கெட்டிங் இன்ஜினியர், புரொடக் ஷன் இன்ஜினியர்॥, இன்டஸ்டிரியல் பவர் எலக்ட்ரீசியன், சென்ட்ரல், ஏசி டெக்னீஷியன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளுக்கு, 28 வயது முதல், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்று, ஆறாண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.விருப்பம் உள்ள ஆண்கள், வரும் 25ம் தேதிக்குள், ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்கள் சுய விபரம் அடங்கிய விண்ணப்ப படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலை அனுப்ப வேண்டும்.இதற்கான நேர்காணல், மே மாதம், 3 மற்றும் 4ம் தேதிகளில், காலை 9:00 மணி முதல், சென்னை கிண்டியில் உள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடக்கிறது.கூடுதல் விபரங்களுக்கு, www.omomanpower.tn.gov.in என்ற வலைதளம், 044 - 22502267, 95662 39685 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.