உள்ளூர் செய்திகள்

யு.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு

புதுடில்லி: யு.பி.எஸ்.சி., நடத்திய முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.நாடு முழுதும் காலியாக உள்ள 979 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை மத்திய அரசின் தேர்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டது. கடந்த மே மாதம் 25ம் தேதி இரண்டு ஷிப்ட்களாக நடந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர்.இதனையடுத்து இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று மாலை முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனை upsc.gov.in மற்றும் upsconline.nic.in என்ற இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் வரும் 16 முதல் 25ம் தேதிக்குள், மெயின் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்