உள்ளூர் செய்திகள்

ரயில்வே வாரியம் தேர்வு அறிவிப்பு

கோவை: ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ள போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ளும் வகையில் பயிற்சிகளை வேலைவாய்ப்பு அலுவலகம் வழங்குகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து கலெக்டர் பவன்குமார் அறிக்கை:ரயில்வே தேர்வு வாரியத்தால் டிக்கெட் சூப்ரவைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கூட்ஸ் டிரைன் மேனேஜர், ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் கிளார்க், டிராப்பிக் அசிஸ்டண்ட் ஆகிய பதவிகளுக்கான 2025-ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 5,810 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கு குறைந்தபட்சம் 18 முதல் 33 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிமுறைகளின் எஸ்சி, எஸ்டி 5 ஆண்டுகள் , ஓ.பி.சி.,க்கு 3 ஆண்டு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் அல்லாத பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட பல்கலையில் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டதாரிகள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து போட்டித்தேர்வுக்கான பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்