உள்ளூர் செய்திகள்

புதுடில்லியில் பழங்குடியினர் கலை விழா தொடக்கம்

சென்னை: புதுடில்லியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பழங்குடியினர் மாணவர் கல்வி சங்கம் சார்பில், புவிசார் குறியீடு பெற்ற பழங்குடியினர் கலைகளை முன்னெடுத்து பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் 3 நாள் கலை பயிலரங்கு மற்றும் கண்காட்சி நேற்று தொடங்கியது.நவம்பர் 24 முதல் 26 வரை நடைபெறும் இந்நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளைச் சேர்ந்த 139 மாணவர்கள், 34 கலை மற்றும் இசை ஆசிரியர்களுடன் 10 பிரபல கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.தொடக்க விழாவில் பல மாநில மாணவர்கள் வழங்கிய பாரம்பரிய நடன, இசை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. ஒடிசாவின் தெம்சா நடனம், உத்தராகண்டின் ஜான்சரி நடனம், மிசோரம் நாட்டுப்புற நடனம், தாத்ரா-நாகர்ஹவேலியின் நாட்டுப்புறப் பாடல்கள், மத்தியப் பிரதேசத்தின் தேசபக்திப் பாடல்கள் கவனம் ஈர்த்தன.பிரபல புவிசார் குறியீடு நிபுணர் ஸ்வேதா மேனன், பழங்குடி கலைகளின் அடையாளம் மற்றும் வருங்கால தேவைகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்