உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்களுக்கு சென்னையில் கருத்தரங்கம்

சென்னை: சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் முதல்வர்களுக்கான கருத்தரங்கு, சென்னையில் நாளை நடக்க உள்ளது.சென்னை சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பில், இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இணைப்பு பள்ளிகளின் முதல்வர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, தி.நகரில் உள்ள, ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடக்க உள்ளது.இதில், 400க்கும் மேற்பட்ட பள்ளிகளின் முதல்வர்கள், ஏற்கனவே பதிவு செய்ததன் அடிப்படையில் பங்கேற்க உள்ளனர். கருத்தரங்கை, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி துவக்கி வைக்க உள்ளார்.ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சைலேந்திர பாபு, சிறப்புரை ஆற்ற உள்ளார். வாழ்நாள் சாதனைக்காக, டாக்டர் ஹண்டே கவுரவிக்கப்பட உள்ளார்.இந்த கருத்தரங்கில், 21ம் நுாற்றாண்டின் வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப திறன்களை மாணவர்களிடம் எவ்வாறு சேர்ப்பது, அதற்கான கற்றல், கற்பித்தல் முறைகளை புதுப்பிக்க வேண்டியது உள்ளிட்ட தலைப்புகளில் வல்லுனர்கள் விவாதிக்க உள்ளனர்.நிறைவாக, சி.பி.எஸ்.இ., 'சென்டர் ஆப் எச்செல்லன்ஸ்' சென்னை நிறுவனத்தின் இணை செயலர் அருணிமா முஜீம்தார், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் பாலசந்திரன் உள்ளிட்டோர், தங்கள் கருத்துகளை பகிர உள்ளனர்.சென்னை சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் கவுரிலட்சுமி, துணைத்தலைவர் சுதாமாலினி, செயலர் சங்கரநாராயணன், பொருளாளர் எஸ்தர் சத்தியவதி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்