உள்ளூர் செய்திகள்

பிரதமர் கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

திண்டுக்கல்: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ,தனியார் தொழில் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.குடும்ப ஆண்டு வருமானம், ரூ.2.50 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். 2025-26ம் கல்வியாண்டில் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு கல்லுாரி மூலம் வழங்கப்பட்டுள்ள யு.எம்.ஐ.எஸ்., எண் மூலம் https://umis.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிச. 31 கடைசி நாள். விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்