கொங்குநாடு கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை: கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில், 'நினைவலைகள்' என்ற தலைப்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.கல்லுாரி செயலர் சங்கீதா தலைமை வகித்தார். ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனரும் தன்னம்பிக்கை பேச்சாளருமான கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''கல்லுாரி நினைவுகள் என்றும் வசந்தமானவை. கல்லுாரி அனுபவம் மற்றும் கற்ற பாடங்கள் வாழ்வில் உயர உரம் சேர்க்கும்,'' என்றார்.முன்னாள் மாணவர் சங்கச் செயலர் வெங்கடாசலம், கல்லுாரியின் முன்னாள் மாணவர்களான கல்லுாரிச் செயலர் மற்றும் முதல்வருக்கு வாழ்நாள் உறுப்பினர் அட்டையை வழங்கினார். கல்லுாரியின் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் சங்கீதா, துணை முதல்வர் நாகராஜா, முன்னாள் முதல்வர் சிவக்குமார், 80க்கும் மேற்பட்ட முன்னாள் பேராசிரியர்களும், 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர்.