உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

திருவள்ளூர்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலையும் கிடைக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நிதியுதவி வழங்கப்படுகிறது.அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு 200, தேர்ச்சி பெற்றோருக்கு 300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோருக்கு 400, பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வீதம், மூன்றாண்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு, அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்