உள்ளூர் செய்திகள்

அறிவியல் கண்காட்சி திருக்கழுக்குன்றம் மாணவியர் வெற்றி

திருக்கழுக்குன்றம்: தென்னிந்திய அளவில், பள்ளிகள் இடையே நடத்தபட்ட அறிவியல் கண்காட்சி போட்டியில், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மூன்றா மிடத்தை வென்றனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் இடையே, மூன்று பிரிவுகளில், மாநில அறிவியல் கண்காட்சி போட்டியை, கடந்த ஆண்டு டிச.,ல், நடத்தியது.இரண்டு மாணவியர் - ஒரு ஆசிரியை பிரிவின்கீழ், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவியர் சோபியா, லோகநாயகி மற்றும் இடைநிலை ஆசிரியை தேவமனோகரி ஆகியோர் குழு, மாநில முதல் பரிசை வென்றனர். இக்குழுவினர், விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு பாதிக்காதவாறு பதப்படுத்திய உணவு உண்பது, சிறுநீரை சுத்திகரித்து குடிநீராக அருந்துவது உள்ளிட்ட அம்சங்களை சார்ந்து காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.அதைத் தொடர்ந்து, தற்போது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்ற, தென்னிந்திய போட்டி, ஆந்திர மாநிலம் ஹைதராபாதில், தற்போது நடத்தப்பட்டது.தமிழகம் சார்பில், திருக்கழுக்குன்றம் பள்ளி குழுவினர் படைப்பு உள்ளிட்ட நான்கு படைப்புகள் இடம் பெற்றன. இப்பள்ளி குழுவினர், மூன்றாமிடம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்