உள்ளூர் செய்திகள்

ராமேஸ்வரம் அமிர்தா பள்ளி ஆண்டு விழா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவகம் அருகில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் 'ஜனனி ஜன்ம பூமி' என்ற தலைப்பில் ஆண்டு விழா நடந்தது.விழாவுக்கு கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் நிர்வாகி, நிகிலேஷ் அமிர்த சைதன்யா, தலைமை வகித்தார். பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக என்.சி.சி., தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் சிபிதாமஸ், பத்மஸ்ரீ மீனாட்சி சித்தரஞ்சன், ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயா பள்ளி முதல்வர் கோகிலா ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில் பள்ளி மாணவர்களின் இசை, நடனம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், பள்ளியில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்