உள்ளூர் செய்திகள்

சோழிங்கநல்லுார் பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு

சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் அரசு மேல்நிலை பள்ளியில், 45 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் உணவு சாப்பிடும் கூடத்தை, தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் நேற்று திறந்து வைத்தார்.ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் அரசு மேல்நிலை பள்ளியில், 1,540 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, கலையரங்கம் மற்றும் உணவு சாப்பிடும் கூடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில், 25 லட்சம் ரூபாயில், 550 சதுர அடி பரப்பு கொண்ட கலையரங்கம் மற்றும் 20 லட்சம் ரூபாயில், 1,500 சதுர அடி பரப்பில் உணவு சாப்பிடும் கூடம் கட்டப்பட்டது. இந்த இரு கட்டடங்களையும், தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் மதியழகன், கவுன்சிலர் சங்கர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்